சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், காங்கிரஸ் சட்டமன்ற குழு முன்னாள் தலைவர் கே.ஆர். ராமசாமி புகார் தெரிவித்தார்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த ஏராளமான காங்கிரசார், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.ராமசாமி, “மாவட்டத் தலைவர் ஆலோசனைக் கூட்டத்திற்கு மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.