வேலூரில் பெய்த கனமழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரம் சாய்ந்ததில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரம் சாய்ந்ததில் மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடியதால் பொதுமக்கள் அவதியடந்தனர்.