திரைப்படங்களின் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் உடலை வருத்தி நடிக்கும் கதாநாயகர்களின் நடிப்பு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வரிசையில், உடலை வருத்தி திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சினிமான்றது நம்மள பொறுத்தவர பொழுது போக்கு. தியேட்டருக்கு போனோமா படத்த பாத்தோம்மா ரெண்டு குத்தாட்டம் போட்டேம்மான்னு என்ஜாய் பன்னிட்டு கிளம்பி வந்திடுவோம். ஆனா இங்க சில நடிகர்கள் ஒரு கதாபாத்திரத்துக்காக உடம்ப வருத்திக்கிட்டு உடல பனையம் வெச்சி நடிப்பாங்க.
எங்க இருந்து ஆரம்பிக்கலாம் முதல்ல ஹாலிவுட்ல இருந்து ஆரம்பிப்போம் ஹாலிவுட்ட பொருத்தவர முக பாவனையிலையே அசத்துரவரு தான் ஜிம் கேரி, ஆக்ஷன்க்காக மெனக்கிட்டு இறங்கவரு தான் டாம் க்ருஷ்
ஜிம் கேரி மாஸ்க்
டாம் க்ருஷ் மிஷன் இம்பாசிபிள்
அப்டே நம்ம கோலிவுட் பக்கம் போனா சாருக்கான். எப்போமே ஆடியன்ஸ்க்கு தன்னோட நடிப்பால ரொம்ப எனர்ஜி கொடுத்தாலும் ஒவ்வொரு கெட்அப்க்கும் தனித்துவத்த வெளிப்படுத்திறதுல இருந்து என்னெக்கும் தவறினது இல்ல.
மை நேம் இஸ் கான்
தெலுங்க இன்டஸ்டரிய பொருத்தவர டான்ஸ்க்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருந்தாலும் நம்ம இந்த லிஸ்ட்ல புஸ்பா படத்துக்காக அல்லு அர்ஜூன்ன சேத்துக்களாம்.
புஷ்பா
இப்பலாம் யார கேட்டாலும் மலையாள சினிமா தான் நல்லா இருக்குன்னு சொல்றாங்க அப்படி இருக்கேல நடிகர்களும் மெனக்கிடுறதுன்றது முக்கியமா போச்சு. அந்த வகையில நம்ம பகத் பாசில் ஒவ்வொரு ப்ரோம்லையும் கண் அசைவுலருந்து ஆக்ரோசமா பேசுரதுளருந்து எல்லாத்துக்குமே தனியா மெனக்கிடுறாரு
கலாபவன் மனி சீரியஸ்சான சீன்ன கூட காமெடியா ரொம்ப அழகா வெளிப்படுத்துவாரு. சில கெட் அப்ல மோகன் லாலையும் சேத்துக்களாம்.
இப்போ நம்ம இன்டஸ்ட்ரிக்கு வருவோம் விக்ரம்,கமல், சூர்யா. விக்ரம் பொருத்தவர உயிர் பனையம் வெச்சு நடிக்கிறதுல கில்லாடி. ஒரு ரோல்க்காக உடல் அமைப்ப மாத்தனுன்னு இயக்குநர் நினச்சாங்கன்ன முதல்ல அந்த ஸ்கிரிப்ட்ட விக்ரம் கிட்ட தான் போய் கொடுப்பாங்க அந்த அளவுக்கு அவரோட அவுட் புட் இருக்கும்.
அதே போல சூர்யான்னா கெட் அப் தான், எந்த கெட்டப்பா இருந்தாலும் அப்படியே மாறிடுவாரு.
இந்த லிஸ்ட்டுல முதல்ல இருக்குறது கமல் ஹாசன் இன்ன வர இந்த உலக நாயகன்ன்ற பட்டத்த மட்டும் யாராலையும் வாங்க முடியல காரணம் மேக் அப்லருந்து ஆக்ஷன் லருந்து கதைவர வித்தியாச வித்தியாசம தேர்ந்தெடுத்து வெளிகொண்டு வரதுல கிங்கு.