தமிழக சட்டமன்ற தொகுதிகள் முழுவதும் பாஜக சார்பில் தேசிய கொடியுடன் பைக் பேரணி நடத்தப்படும் என பாஜக பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக சார்பில் ”இல்லம் தோறும் மரம் நடுவோம், வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுவோம்” என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் அதன்படி வரும் 11-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தப் பேரணிக்காக தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதே தங்களின் இலக்கு எனவும் கதலி நரசிங்க பெருமாள் கூறினார்.