ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிர் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டத்தின் இறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் வினேஷ் போகத் முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.