ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள எட்டியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் நடத்தப்படும் திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டது.
இதில் உற்சவர் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு தீபாரதணை காட்டப்பட்டது. அப்போது விரதமிருந்த பக்தர்கள் உடம்பில் அலகு குத்தியபடியும், கயிற்றில் தொங்கியபடியும் அம்மனுக்கு மாலையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.