தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தூய அலங்கார அன்னை தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் அந்தோணிசாமி மாதா உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார்.
இதனையொட்டி வண்ண வண்ண மின் விளக்குகளால் தூய அலங்கார அன்னை பேராலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கிய நிகழ்வான தேர் பவனி வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.