திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலையில் தோல் கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டி தேக்கி வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
மாதனூர், ஜமீன் பகுதியில் காலணி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தோல் கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டி தேக்கி வைக்கும் குடோனில் தீப்பற்றி எரிந்தது.
இதனையறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.