ஃபிஜி தீவில் உள்ள சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஃபிஜி தீவுகள், நியூசிலாந்து உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஃபிஜி தீவு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நாடி பகுதியில் உள்ள சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.