வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஷாஹின் சுக்லதாருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்த நிலையில் டாக்காவில் உள்ள அவாமி லீக் கட்சி பொதுச்செயலாளர் ஷாஹின் சுக்லதார் ஹோட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதில் ஓட்டலில் தங்கி இருந்த 24 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.