வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறையின்போது தலைநகர் டாக்காவில் உள்ள இந்திரா காந்தி கலாசார மையத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால், அந்தக் கட்டடம் உருக்குலைந்தது.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு முழக்கமிட்டு, கலாசார மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடி, கட்டடத்துக்கு தீ வைத்தனர்.
இதனால் கலாசார மையம் புகைபடிந்து கருப்பு நிறத்துக்கு மாறியது.