அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் மினிசொட்டா மாகாண ஆளுநர் டிம் வால்ஸை நிறுத்த கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர், துணை அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், துணை அதிபர் பதவிக்கு பென்சில்வேனியா மாகாண ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ மற்றும் மினிசொட்டா மாகாண ஆளுநர் டிம் வால்ஸ் ஆகியோரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், டிம் வால்ஸுக்கு கமலா ஹாரிஸ் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.