பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து அணி முன்னேறியுள்ளது.
இத்தொடரின் முதல் அரையிறுதியில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணியினர் அடுத்த சுற்றான இறுதிப்போட்டிக்குள் நுழைகின்றனர்.