ஆவடி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டியை திறந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே கவுதம் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் ரூபாவதி தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்ற நிலையில், மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். உடனடியாக மகளை மீட்ட தாய் பிரியா அருகில் உள்ள ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.