திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.
கூணங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களுக்கும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கூணங்குப்பத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் காயமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.