சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் ரூ.26 கோடி செலவில் பிரமாண்ட புதிய கட்டடம் கட்ட 2017ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனிடையே நடிகர் சங்கத் தேர்தல், நிர்வாக பிரச்சினை, சட்ட பிரச்னைகள், கொரோனா போன்ற காரணங்களால் சங்க கட்டட பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
நிதி பிரச்சினை காரணமாக 3 ஆண்டுகளாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதுவரை 20 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்ட நிலையில், மேலும் பல கோடிகள் தேவைப்படுகிறது என கூறப்பட்டது.
நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் இருந்தது . அதேநேரம் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்றதும், மீண்டும் கட்டடம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சமீபத்தில் நடந்த பொதுக்குழுவிலும் கட்டடம் கட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்னும் 30 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தேவைப்படுவதாக பொருளாளர் கார்த்தி கூறினார்.
அந்த வகையில் அண்மையில் கமல்ஹாசன் விஜய் நெப்போலியன் தனுஷ் ஒரு கோடியும் சிவகார்த்திகேயன் 50 லட்சமும் வழங்கினார்கள். இந்நிலையில் அதற்கான பணிகளை ஏப்ரல் 22 ஆம் தேதி நடிகர் சங்கக் குழுவினர் தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் கட்டிடப் பணிகள் முழுமையாக ஆறு மாதத்திற்குள் முடிவு பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.