மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது என காரணம் கூறப்பட்டு, போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
உடல் எடையை குறைப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் நீர்சத்து குறைவு காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.