ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போல் வினேஷ் போகத்துக்கு பாராட்டு விழா நடத்த ஹரியானா அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து விலகுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வினேஷ் போகத்துக்கு பாராட்டு விழா நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
வினேஷ் போகத்தை எண்ணி ஹரியானா மக்கள் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீரருக்கு வழங்கப்படும் அனைத்து மரியாதை மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.