சென்னை காசிமேட்டில் ஆந்திர மீனவரை அடித்துக் கொன்ற சக மீனவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தர்மராஜ், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரகு என்பவருடைய விசைப்படகில், மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த 4ஆம் தேதி கடலில் சடலமாக மிதந்துக் கொண்டிருப்பதைக் கண்ட மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தர்மராஜின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தர்மராஜுடன் வழக்கமாக மீன்பிடிக்க செல்லும் 9 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மது வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆந்திராவை சேர்ந்த சக மீனவரான உமா மகேஸ்வரன், தர்மராஜை அடித்துக்கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து உமா மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.