தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 23 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக குறைந்த நிலையில், ஒகேனக்கல் கோத்திகள் பாறை பகுதியில் இருந்து மணல் திட்டு வழியாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.