துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணி ஒருவரின் இருக்கையின் அடியில் தங்கக்கட்டிகள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 700 கிராம் எடையுள்ள 47 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 6 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.