கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வதிஷ்டாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர், வழக்கம்போல் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அறையில் தூங்கி உள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் 26 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.