நியூசிலாந்து சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரௌபதி முர்மு, முதல் நாடாக ஃபிஜி தீவு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு 2து நாடான நியூசிலாந்து சென்றடைந்தார்.
வெலிங்டன் விமானம் நிலையம் வந்த அவருக்கு நியூசிலாந்து அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெலிங்டன் அரசு மாளிகை சென்ற திரௌபதி முர்மு, “போவிரி” எனப்படும் நியூசிலாந்தின் பாரம்பரிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.