தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில் வரும் 11-ம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் நடிகர் தனுஷ், விஷால், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுப்பதாகவும், அதிலும் நடிகர் தனுஷ் படம் நடித்தால் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு பதிலளித்த நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி இந்த தீர்மானங்களை நிறைவேற்றும் முன் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தனுஷ் இதுவரை தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி கூட உள்ளதாகவும் அதில் நடிகர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்தது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.