பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூ – டியூபர் சவுக்கு சங்கர், பலத்த பாதுகாப்புடன் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஜாமின் வழங்கியதை சுட்டிக்காட்டி ஜாமின் தரப்பட்டது.