தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் சாதவாகனா பல்கலைக்கழகம் அருகே சாலையில் 18 மாத குழந்தை மீது தெருநாய் கடித்து குதறும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஹரிநந்தன் என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று தாக்கியதில் பலத்த காயமடைந்தான்.
நாயிடம் இருந்து மீட்கப்பட்ட ஹரிநந்தன் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஹைதராபாத்தில் மனிதர்களை நாய்கள் தாக்குவது தொடர்கதையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.