தங்கள் இதயங்களை கேரள மக்களிடமே விட்டுச் செல்வதாக வயநாட்டிலிருந்து புறப்பட்ட ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இந்திய ராணுவத்தில் பெரும்பாலானோர் வயநாட்டிலிருந்து புறப்பட்டனர்.
அப்போது பேசிய ராணுவ வீரர்கள், தாங்கள் இங்கிருந்து சென்றாலும் தங்கள் இதயங்களை கேரள மக்கள் குறிப்பாக வயநாடு, மேப்பாடி மக்களிடமே விட்டு செல்வதாக கூறியுள்ளனர்.