வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர் என்றும், மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
நீரஜ் சோப்ரா மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வலம் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது என்றும், வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நீரஜ் ஊக்கமாக இருப்பார் என்றும், அவரால் தேசம் பெருமை கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அற்புதமான சாதனை புரிந்து வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வெற்றி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்வித்துள்ளதாகவும் புகழ்ந்துள்ளார்.