சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் 3 பணக்கார குழுமங்களின் வணிக சொத்து மதிப்புக்கு நிகரானது என தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தொழிலதிபர்களின் பட்டியலை பார்க்லேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் 25 புள்ளி 8 லட்சம் கோடி ரூபாயுடன் அம்பானி குழுமம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக 7 புள்ளி 1 லட்சம் கோடி ரூபாயுடன் பஜாஜ் குழுமம் 2வது இடத்தையும், 5 புள்ளி 4 கோடி ரூபாயுடன் பிர்லா குழுமம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதற்கு அடுத்தடுத்த இடங்களை ஜிண்டல் குழுமம், HCL குழுமம், மகேந்திரா குழுமம் ஆகியவை பெற்றுள்ளன. இந்நிலையில் முதல் 3 தொழிலதிபர்களின் வணிக சொத்து மதிப்பு, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரானது என தெரியவந்துள்ளது.