சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.
வரும் 15-ம் தேதியன்று நாட்டின் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தின் முகப்பு படத்திலிருந்த அவரது புகைப்படத்தை நீக்கிவிட்டு, மூவர்ண கொடியின் படத்தை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் தன்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.