ராஜஸ்தானில் மிகவும் பழமையான தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.
தௌசா பகுதியில் எவ்வித பராமரிப்பும் இன்றி மிகுந்த சேதத்துடன் தண்ணீர் தொட்டி இருந்தது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன் வைத்து வந்தனர்.
இந்த நிலையில், அந்த தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அந்தப் பகுதிக்கு யாரும் செல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.