மகாராஷ்டிராவில் உள்ள திரையரங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கோலாப்பூர் பகுதியில் உள்ள கேசவ்ராவ் போசலே திரையரங்கில் திடீரென கடும் புகை மூட்டமாக காட்சியளித்தது.
பின்னர் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனையறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.