ரஷ்யாவில் தனது எதிராளியை வெளியேற்றுவதற்காக செஸ் மேஜையில் பாதரசம் தெளித்த வழக்கில் வீராங்கனை ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் விளையாடத் தடை விதிக்கப்பட இருக்கிறது.
ரஷ்யாவின், தாகெஸ்தானில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வீராங்கனையான ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ரஷ்ய வீராங்கனை அமினா அபகராவோ எதிராளியின் மேஜையை அணுகி செஸ் போர்டில் பாதரசத்தை தெளித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.