தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் 25வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.