திருச்சி தூய வளனார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மனித நேயம் காப்போம், ஆற்றல் உற்பத்தி, போதை ஒழிப்பு, 2050-ல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஓவியங்களை வரைந்து மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.