கருட பஞ்சமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்த உற்சவர் வாகன மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.