பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஆக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது இதில் 206 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதன் நிறைவு விழாவின் போது மனு பாக்கர் மற்றும் இந்திய ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.