ஐ.பி.எல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக டெல்லி அணி முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வந்தார். அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு இந்திய பயிற்சியாளர் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் விரும்பியது.
இதனையடுத்து ரிக்கி பாண்டிங் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.