மாமதுரை விழாவில் நடைபெற இருந்த பலூன் திருவிழா முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மதுரையில் மாநாகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் 4 நாட்கள் நடைபெறும் மா மதுரை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்வுகளான தொல்லியல் பயணம், மதுரை கலைத் திருவிழா, உணவு திருவிழா, வாணவேடிக்கை உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற வைகையை போற்றுவோம் நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், வைகை ஆற்றில் மெழுகுவர்த்தி ஏந்தி வைகை அன்னையை வழிபட்டனர். விளக்கொளியில் ஜொலித்த வைகையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.