கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதல் பயணம் மேற்கோண்ட பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயண கட்டணமாக 19 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகள் மூலம் வர்த்தகம், மருத்துவ ரீதியாக மக்கள் பயன் அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.