கிழக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் நூறு பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில், தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் நூறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.
இப்பள்ளியை பாதுகாப்பு முகாமாக பயன்படுத்தி ஏராளமான மக்களை தங்கவைத்ததை அறிந்தே இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.