சேலம் அரசு மருத்துவமனையில் நுழைவு சீட்டு வாங்க நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பதிவு சீட்டு வழங்க வெறும் 2 கணினிகளே உபயோகத்தில் இருப்பதால் நோயாளிகள் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நுழைவு சீட்டை வாங்க முடியாமலே பலர் சிகிச்சை பெறாமல் திரும்பிச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.