தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஜிகே வாசன் தலைமையில் 2024-2027 க்கான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அலுவலகங்களில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் வருகை தந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.
2024- 2027 கான புதிய உறுப்பினர் படிவத்தில் முதல் ஆளாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே வாசன் கையெழுத்திட்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசன்,
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி, விண்கலம் வென்று நாட்டிற்கு திரும்பிய வீரர்களுக்கு வாழ்த்துகள்.
மத்திய, மாநில அரசுகள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை அடையாளம் கண்டு வரும் நாட்களில் சாதனை படைக்கும் உயர்நிலையை ஏற்படுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் திமுக அரசு காலம் கடத்திக் கொண்டிருக்கிறது.
ஆசிரியர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, மாணவர்கள் பிரச்சனை என பல தரப்பு பிரச்சனைகளை தீர்க்கும் நிலையை அரசு முன்னெடுக்க வேண்டும்.
தமிழக அரசு மக்கள் மீது தொடர் சுமையை ஏற்றி வருகிறது, தமிழக மக்களுக்கு சுமை கொடுக்கும் அறிவிப்புகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.
வங்கதேசத்தின் பிரச்சனைக்கு சரியான முடிவை எடுக்க வேண்டும், வங்கதேசத்தில் இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்த அரசு உறுதி செய்ய வேண்டும், வங்கதேசத்தில் அமைதி நிலவ வழிவகை செய்ய வேண்டும்.
கடந்த வாரம் வெளியுறவு துறை அமைச்சர் மீனவர்களுக்கு உத்தரவாதம் வழங்கி உள்ளார். மீனவர்கள் மீது அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மீனவர் பிரச்சனையில் இந்திய வெளியுறவுத்துறை இலங்கை அரசிற்கு அழுத்தம் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் மீது வெடிகுண்டு அச்சுறுத்தல் இல்லாமல் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல்களால் தமிழக மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சமீப காலமாக அரசியல் கட்சி நிர்வாகிகளை குறிவைத்து பழி வாங்கும் நோக்கத்தோடு கொலை செய்து வருகின்றனர்.
வாக்களித்த மக்கள் மீது அரசுக்கு கவலையில்லை. போதைப் பொருள் கலாச்சாரத்தை 100% தடுக்க வேண்டும். போதைப்பொருள் கலாச்சாரத்தில் கண்டும் காணாதாக அரசாக செயல்படுவது தமிழக அரசுககு நல்லதல்ல. எந்தவித சமரசத்திற்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் இடம் தரக் கூடாது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினியை நிறுத்தி இருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலவச மடிக்கணினி தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
வக்பு வாரியத்தின் வருங்கால வளர்ச்சி குறித்து கூட்டுக் குழுவில் முடிவு செய்யப்படும். வக்பு வாரியம் மசோதாவை பற்றி எதிர்க்கட்சிகள் தவறாக கூறுவது ஏற்புடையது அல்ல, ஏழை எளிய இஸ்லாமியர்களின் நலன் கருதியே வக்பு வாரிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் கைது குறைக்கப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சனை குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
ஃபார்முலா போர் கார் பந்தயத்திற்கு செலவு செய்யும் பணிகளை சென்னையில் மாநகராட்சியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறையும், வசதியாக இருக்கும் , சுமை குறையும். திமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அரசிடம் கார் பந்தயத்தை கேட்கவில்லை..
வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது புரிதல் இல்லாத அறியான்மையுடைய வெளிப்பாடு தான் என தெரிவித்தார்.