ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தமிழக மக்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக பக்தர்கள் வந்து செல்லும் இடமாக ராமேஸ்வரம் உள்ளது.
ராமநாத சுவாமி கோயிலுக்கு செல்லும் வீதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் நகராட்சி நிர்வாகம் அதனை அப்புறப்படுத்த வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவர்கள், பெரியவர்கள் என 8-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியுள்ளது. மேலும், ராமேஷ்வரத்திற்கு பாதயாத்திரையாக வந்த வடமாநில பெண்ணும் தெரு நாய் கடித்து படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.