திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதால் நீர் மாசடைவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்..
ஆம்பூர் மற்றும் சுற்றுப்புர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் ஆற்றின் அருகே செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதாகவும், இந்த கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் நீர் மாசடைவதாகவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பலமுறை புகாரளித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
எனவே அரசு அதிகாரிகள் தலையிட்டு தோல் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.