நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைக்கப்பட்டது.
ஆனால், ஒரு சில நடைமுறை சிக்கல் காரணமாக கப்பல் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. இந்நிலையில், அந்தமானில் வடிவமைக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் கொண்டுவரப்பட்டு, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து, வரும் 15 -ம் தேதிக்கு பின்னர் கப்பல் சேவை தொடங்க உள்ளது. மிக குறைந்த செலவில், அதிக வசதிகள் கிடைப்பதால் இந்த கப்பல் சேவை பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.