சேலத்தில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சேலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விடிய விடிய இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 121.4 மில்லி மீட்டரும், வீரகனூரில் 114 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 847.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதன் எதிரொலியாக மழை நீர் வீடுகளுக்குள் சென்றதால் மக்கள் அவதியடைந்தனர்.
அதன் படி கிச்சிபாளையம், பள்ளப்பட்டி, கொண்டலாம்பட்டி,உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.