விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கடந்த 7ம் தேதி வெகு விமரிசையாக நடந்தேறியது. ஆடிப்பூர விழாவின் இறுதிநாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.
முன்னதாக ஆண்டாள், ரெங்க மன்னர் ஆகியோரை வரவேற்று ரத வீதிகள் வழியாக சடாரி ஊர்வலம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆண்டாள், ரெங்க மன்னாரின் சடாரிகளுக்கு மஞ்சள் மற்றும் சந்தனத்தால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.