சிவகங்கை அருகே மதுபோதையில் இருந்த நீரேற்றும் நிலைய ஊழியரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முசுண்டப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ், காவேரி கூட்டு குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நீரேற்று நிலையம் அருகே சிலர் மது அருந்தியுள்ளனர். இதற்கு தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், மது பாட்டிலை உடைத்து தங்கராஜ் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே தங்கராஜ் உயிரிழந்தார்.
கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார், சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.