உணவு டெலிவரி ஊழியர்கள் சீருடை அணியாத காவல்துறையினர் என சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் வரும் 26-ம் தேதி விபத்தில்லா தினமாக கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வடபழனியில் உணவு டெலிவரி ஊழியர்களுடன் விபத்தில்லா தினம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், காவலர்களின் தூதுவர்களான உணவு டெலிவரி ஊழியர்கள், விபத்தில்லா தினம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வாடிக்கையாளர் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகவே டெலிவரி ஊழியர்கள், அவசரம் அவசரமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள் என தெரிவித்தார்.